யாழ்ப்பாணம் மண்கும்பான் வெள்ளைக் கடற்கரை செய்கு சுல்தான் அப்துல் காதிர் வலீயுல்லாஹ் ரஹிமஹுல்லாஹ்
யாழ்ப்பாணத்திலிருந்து ஏறத்தாள 13 கிலோமீற்றர் துாரத்தில் வேலனை மண்கும்பாம் வெள்ளைக் கடற்கரை ஜும்மா பள்ளிவாசலுடன் செய்கு சுல்தான் அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களின் ஸியாரம் அமையப் பெற்றுள்ளது. புகழ்பெற்ற சாட்டி கடற்கரை அருகே இந்த ஸியாரத்துடனான பள்ளிவாசல்அமைந்திருப்பது முக்கிய அம்சமாகும். செய்கு சுல்தான் அப்துல் காதிர் வலீயுல்லாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் யெமன் நாட்டில் இருந்து தஹ்வா பணிக்காக இலங்கைக்கு வந்தாகவும், பின்னர் இவ்விடத்தில் கி.பி. 1598 இல் (ஹிஜ்ரி 1008இல்) அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
செய்கு சுல்தால் அப்துல் காதிர் வலீயுல்லாஹ் அவர்கள் மண்கும்பான் வெள்ளைக் கடற்கரைக்கு வந்த காலப்பகுதயில் அங்கு மட்பாண்டங்கள் செய்யும் குயவர்கள் வாழந்ததாகவும், அதனாலேயே குறித்த பிரதேசம் மண்கும்பான் என அழைக்கப்பட்டதாகவும் அறியக்கிடைக்கின்றது. மேலும், செய்கு சுல்தான் அப்துல் காதிர் வலீயுல்லாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டதன் காரணமாகவே குறித்த இடத்தில் பள்ளிவாசல் கட்டுப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. மண்கும்பான் வெள்ளைக் கடற்கரைப் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள கடலில் குளிப்பதற்காக மக்கள் வருகின்றதோடு, குறித்த பகுதி ஒரு சுற்றுளாத் தளமாக விளங்குகின்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும், கடற்கரைப் பகுதியென்பதால் இப்பிரதேச கிணறுகளின் காணப்படுகின்ற நீர் குடிக்க உகந்தல்ல. எனினும், சுல்தான் அப்துல் காதிர் வலீயுல்லாஹ் அவர்களின் ஸியாரத்திற்கு மிக அண்மையில் காணப்படும் கிணற்றில் உள்ள நீர், குடிக்க உகந்த மதுரமான நீர் என்பது
குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணம், அவர்கள் 40அடி நீளமானவர்கள் என்றும், அவர்களின் கால்பகுதியுடனேயே குறித்த கிணறு அமைந்துள்ளது
எனவும் கூறப்படுகின்றது.
மண்கும்பான் வெள்ளைப் கடற்கரைப் பள்ளிவாசலுக்கு அருகில் ஏறத்தாள 40 முஸ்லிம் குடும்பங்கள் வாழந்து வருகின்றனர். போர் நடைபெற்ற காலப்பகுதியில் இவ்விடத்தில் இருந்த இராணுவத்தினர் மற்றும் புலிகளுக்கு பல அற்புத நிகழ்வுகள் நடைபெற்றதாக அறியக்கிடைத்தது. யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் முஸ்லிம்களின் இருப்பிற்கு மிக முக்கிய அடையாளமாக செய்கு சுல்தால் அப்துல் காதிர் வலீயுல்லாஹ் அவரகளின் ஸியாரம் விளங்குகின்றது. எனவே, இந்த இடத்தை சரியான முறையில் பாதுகாப்பது நமது அனைவரினதும் கடமையாகும்.
தொகுப்பு : இப்ஹாம் நவாஸ்



Leave a Comment