தப்தர் ஜெய்லானி செய்கு தர்வேஷ் முஹியித்தீன் ஒலியுல்லாஹ்


தப்தர் ஜெய்லானியில் செய்கு தர்வேஷ் முஹியித்தீன் ஒலியுல்லாஹ் அவர்களுடைய ஸியாரம் அமையப்பெற்றுள்ளது.1922ஆம் ஆண்டு தப்தர் ஜெய்லானிப் பள்ளிவாசல் அமைப்பதற்கான அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் போது, செய்கு தர்வேஷ் முஹியித்தீன் ஒலியுல்லாஹ் அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட மீதான்கல் கண்டெடுக்கப்பட்டது. அதில் அவர்கள் மரணித்த வருடம் ஹிஜ்ரி 715 (கி.பி. 1322) எனக் குறிக்கப்பட்டிருந்தது."தர்வேஷ் முஹியித்தீன்" என்பதன் பொருள் "முஹியித்தீனின் சீடர்" என்பதாகும். அதாவது, கெளதுல் அஹ்ழம் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களது சீடர் (முரீத்) என்பதாகும். கெளதுல் அஹ்ழம் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் வபாத்தாகி, 154 வருடங்களின் பின்னர் அவர்கள் தியானத்தில் இருந்த, தரிசித்துச் சென்ற தப்தர் ஜெய்லானியை தரிசிக்க வந்த அவர்களின் ஒரு முரீதே இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது அகழ்வின் போது கிடைத்த மீஸான் கல்லின் மூலம் பின்பு உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம், கெளதுல் அஹ்ழம் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வபாத்தின் பின்னர் , இலங்கைக்கு அவர்களது முரீதுகள் (சீடர்கள்) வந்தார்கள் என்றும், அவர்கள் இலங்கையில் வாழ்ந்தார்கள் என்றும் அறிந்துகொள்ள முடியும். மேற்குறித்த தகவல் எம். எல். அபுஸாலி அவர்களால்எழுதப்பட்ட " DAFTHER JAILANY - A Historical Account of the Dafther Jailani Rock Cave Mosque " என்ற நுாலில் தரப்பட்டுள்ளது.எனவே, எமது இருப்பினை உறுதிப்படுத்துவதற்கு மிக முக்கிய ஆதாரமாகக் காணப்படுகின்ற ஸியாரங்களைப் பாதுகாப்போம்.
குறிப்பு : தர்வேஷ் முஹியித்தீன் வலிளயுல்லாஹ் அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட மீஸான் கல்லை படத்தில் காணலாம்.

தொகுப்பு : இப்ஹாம் நவாஸ்
பட உதவி : சகோதரர் அஹ்மத்


No comments

Powered by Blogger.