ஏறாவூர் மீராலெப்பை வலியுல்லாஹ்
ஏறாவூரில் கண்ணியமிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மீராலெப்பை வலீயுல்லாஹ் அவர்கள் நற்குணத்திலும் நல்லொழுக்கத்திலும் சிறந்து விளங்கினார்கள்.ஏறாவூர் மக்களின் இணையற்ற தலைவராய் வீற்றிருந்து ஆட்சி நடத்திய இவர்களது நீதி நேர்மை மிக்க ஆட்சியினை இனங்கண்ட ஆங்கிலேயர்கள் இவர்களுக்கு முகாந்திரம் எனும் பட்டம் வளங்கி கௌரவித்தார்கள்.
இறைநேசர் பல்லாக் வலீயுல்லாஹ் அவர்களிடமிருந்து வாக்கு பெற்ற பின் இவர்களுக்கு விசக்கடி வைத்தியம் கைவரப்பெற்றது. 1954ல் இவர்கள் வபாத்தான பின்னர் உறவினர் ஒருவரின் கனவில் தோன்றி எனது கப்றில் நடப்பட்டுள்ள மீஸான் கட்டை மூலம் பயன்பெற்றுக் கொள்ளுங்கள் எனத் தெறிவித்தார்கள்.
அன்றிலிருந்து அல்லாஹ்வின் நாட்டப்படி எண்ணற்ற மக்கள் ஆயிரக்கணக்கில் இன மத பாகுபாடின்றி இக்கபுறடியை நாடி வந்து தமது உடல் எள நோய் தீரக்கண்டு புன்னகைத்தவர்களாக தீரும்பிச் செல்கின்றனர். பாம்பு விசம் தீண்டி சுய நினைவின்றி கொண்டுவரப்படுபவர்கள் கூட “கட்டை பிடித்து விசம் இறங்கிய பின்னர் எழுந்து நடந்து செல்வதையே கண்முன்னே காணமுடியும்.
குறிப்பு: மாற்று இயக்கத்தைச் சார்ந்த போலித் தவ்ஹீத்-தப்லீக் வாதிகளும் இந்த சியாரத்துக்கு விசம் கடித்து நடக்க முடியாமல் வந்து கட்டை பிடித்து விசம் இறங்கி சென்ற வரலாறுகளும் இருக்கின்றன.
எமது நாட்டின் தூரப் பிரதேசங்களிருந்தெல்லாம் நாளும் வந்து செல்லும் மக்களின் துயர் நீக்கும் மீராலெப்பை வலீயுல்லாஹ் அவர்களின் சியாரம் இலங்கை மட்டக்களப்பு நகருக்கு வடக்கே 15மஅ தூரத்தில் ஏறாவூர் நகரில் பிரதான வீதியில் இருந்து 5 நிமிட நடைபயண தூரத்தில் கிராம நீதி மன்ற வீதியில் அமைந்துள்ளது.
இந்த மக்பராவில் வலியுல்லாஹ் அவர்களின் தகப்பனாரும், அவர்களின் பாட்டணாரும், வலியுல்லாஹ்வின் புதல்வரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான மர்ஹூம் டாக்டர் அஹமட் பரீட் மீராலெப்பை அவர்களும் மற்றும் சகோதரர்களின் கப்றுகளும் இருக்கின்றன.இந்த சியாரத்துக்கு பல நாடுகளிருந்தம் பல ஆய்வாளர்களும் வந்து கொண்டிருக்கின்றார்கள்.இந்த சியாரத்துக்கு பல நாடுகளிருந்தம் பல ஆய்வாளர்களும் வந்து கொண்டிருக்கின்றார்கள்.
நன்றி : Eravur Yoosuf Musthafi



Leave a Comment