700 வருடங்கள் பழைமைவாய்ந்த இலங்கையை ஆட்சிசெய்த முஸ்லிம் அரசனின் ஸியாரம்
குருநாகல் இராஜதானியை ஆட்சிசெய்த கலேபண்டார அவ்லியா என அழைக்கப்படும் குராஸான் செய்யித் இஸ்மாயீல் வலீயுல்லாஹ் அவர்களின் அடக்கஸ்தளம் குருநாகல் நகரில் அமைந்துள்ளது. இவர்கள் வத்ஹிமி பண்டார அல்லது கலேபண்டார என்று அழைக்கப்படுகின்றார்கள். இலங்கையின் குருநாகல் நகரை ஆட்சிசெய்த இரண்டாவது புவனேகபாகு மன்னனுக்கும் (கி.பி. 1293–1302), அவரது முஸ்லிம் மனைவிக்கும் பிறந்தவரே இவர்கள் ஆவர்.
இவர்களது தாய் குருநாகலின் அஸ்வதும என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் ஆவார். பிறந்தது முதலே இவர்கள் , ஒரு இஸ்லாமியராக வளர்க்கப்பட்டார்கள். இவர்களது தாய்வழி மாமன் ஒருவரால் பேருவளை நகருக்கு மார்க்கக் கல்விக்காக அழைத்துச் செல்லப்பட்டார்கள். பேருவளையில் அவர்கள் வளர்ந்த இடமே , அவர்களது பெயரில் தற்போது வத்ஹிமி ராஜபுர என்று அழைக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக சில வரலாற்று ஆசிரியர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள். கி.பி. 1302ஆம் ஆண்டு இரண்டாவது புவனேகபாகு மன்னின் மரணத்திற்கு பின்னர், குருநாகல் இராஜதானியை குறுகிய காலம் ஆட்சிசெய்தார்கள். இவர்கள் ஆட்சிசெய்த காலம் மூன்று அல்லது ஐந்து வருடங்கள் என சில வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் ஆட்சிபீடம் ஏறியது முதல் இவர்களுக்கு எதிராக பாரிய சதிகள் மேற்கொள்ளப்பட்டதோடு, சிறிது காலத்தின் பின்னர் கொல்லப்பட்டார்கள். இலங்கையை ஆட்சிசெய்த மன்னர்கள் பற்றிக் குறிப்பிடும் ராஜாவலிய என்ற புத்தகத்தில் இவர்கள் பெயர் இடம்பெறவில்லை
என்பது குறிப்பிடத்தக்து. இது திட்டமிட்டு மறைக்கப்பட்ட ஒரு விடயமாகும் என சில வரலாற்று ஆசிரியர்கள் ஆதங்கப்படுகின்றனர். இவர்களது மரணத்திற்குப் பின்னர் குருநாகல் நகரில் அடக்கம் செய்யப்பட்டார்கள். இவர்களது அடக்கஸ்தளத்தை தரிசிப்பதற்காக முஸ்லிம்கள் மட்டுமின்றி, ஏனைய மதங்களைச் சேர்ந்த மக்களும் வருகைதருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.

Leave a Comment