900 வருடங்களாக மக்களுக்கு இலவசமாக உணவு விநியோகிக்கும் பள்ளிவாசல்!

 

படம் -01

அஷ்செய்ஹ் அப்துல் காதிர் ஜீலானி றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹிஜ்ரி 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் இஸ்லாமிய அறிஞராகவும், ஆத்மஞானியாகவும் அறியப்படுகின்றார்கள். இவர்கள் அப்பாஸிய கிலாபத்தின் ஆட்சிக்காலப் பகுதியில் பக்தாதில் வாழ்ந்தார்கள். அக்காலப் பகுதியில் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் இடையில் தொடர்பு குறைவாகக் காணப்பட்டது. ஆட்சியாளர் முதல் பொது மகன் வரை அனைவரும் மார்க்கத்தில் இருந்து துாரமாகக் காணப்பட்டனர். இந்த சூழ்நிலையில் அவர்கள் மக்களை இஸ்லாத்தின்பால் அழைத்தார்கள். அவர்களின் போதனைகளால் மக்கள் கவரப்பட்டதுடன், அவர்களது போதனைகளை கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். அங்கு வந்த மக்களுக்கு உணவும், தங்குமிட வசதிகளும் இலவசமாக செய்து கொடுக்கப்பட்டன. அஷ்செய்ஹ் அப்துல் காதிர் ஜீலானி றஹிமஹுல்லாஹ் அவர்களின் வபாத்தின் பின்னரும் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள மக்பரா மற்றும் அதனுடன் அமைந்துள்ள பள்ளிவாசலில் மக்களுக்கு உணவு வழங்கும் நடைமுறை தொடர்ந்ததுடன், இன்றுவரை அதாவது ஏறத்தாள 900 வருடங்களாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
 
உணவு வழங்கல் தொடர்பாக அஷ்செய்ஹ் அப்துல் காதிர் ஜீலானி றஹிமஹுல்லாஹ் அவர்களின் கீழ்வரும் கூற்று கவனிக்கத்தக்கது.
 
" நான் பல ஆன்மீக (தஸவ்வுப்) புத்தகங்களை பார்த்திருக்கின்றேன். ஆனால், அவற்றில் மக்களுக்கு உணவளிப்பதை விட சிறந்த விடயமொன்றை காணவில்லை. இந்த உலகம் எனது கையில் இருந்திருப்பின், பசித்தவர்களுக்கு உணவளிப்பதை தவிர வேறு எந்த ஒரு விடயத்திலும் நான் மகிழ்வடைந்திருக்க மாட்டேன்."
 
அஷ்செய்ஹ் அப்துல் காதிர் ஜீலானி றஹிமஹுல்லாஹ் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட காதிரிய்யா வழியமைப்பை சேர்ந்த அவர்களது மாணவர்களால் அமைக்கப்பட்ட பல தக்கியாக்கள் அல்லது தைக்காக்கள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. அந்த தக்கியாக்களில் வெள்ளிக்கிழமை இரவு மற்றும் ஏனைய நாட்களில் திக்ர் மற்றும் ஸலவாத் மஜ்லிஸுகள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான இடங்களிலும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

 
 
இலங்கை மற்றும் இந்தியாவிலும் பல தைக்காக்கள் காணப்படுவதோடு, அவ்விடங்களிலும் நடைபெறும் திக்ர் மற்றும் ஸலவாத் மஜ்லிஸுகளில் உணவு வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் காணப்படுகின்ற சில தக்கியாக்களில் நூறு வருடங்களுக்கு மேலாக மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 
 
படம் -03
 
 
படம் 1 : ஈராக்கின் பக்தாத் நகரில் அமைந்துள்ள அஷ்செய்ஹ் அப்துல் காதிர் ஜீலானி றஹிமஹுல்லாஹ் அவர்களின் பள்ளிவாசல்
 
படம் 2 : ஈராக்கின் பக்தாத் நகரில் அமைந்துள்ள அஷ்செய்ஹ் அப்துல் காதிர் ஜீலானி றஹிமஹுல்லாஹ் அவர்களின் பள்ளிவாசலில் மக்களுக்கு உணவு வழங்கும் காட்சி 
 
படம் 3 : இலங்கையில் நூறு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் திக்ர் மஜ்லிஸில் (மனாகிப் மஜ்லிஸில்) கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட வைத்திருக்கும் ஸஹன் உணவு (பாதிபிய்யதுல் காதிரிய்யா தக்கியா, கஹடோவிட) 
 
தொகுப்பு : Ifham Nawas Al-Qadiri

No comments

Powered by Blogger.