அஷ்செய்க் அப்துல் அஸீஸ் அல்-ஜீலானி (ரஹிமஹுல்லாஹ்) - As-Shaykh Abdhul Azeez Al-jailani (Rahimahullah)
அஷ்செய்ஹ் அப்துல் அஸீஸ் அல்-ஜீலானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இமாம் அப்துல் காதிர் ஜீலானி (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் மகனாவார். இவர்கள் பெரும் முஜத்தித்தாகவும், காதிரிய்யா வழியமைப்பின் செய்ஹாகவும் இருந்தார்கள். சுல்தான் ஸலாஹுத்தின் அல்-அய்யூபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள், அஷ்செய்க் அப்துல் அஸீஸ் அல்-ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் முரீதாக (மாணவராக) இருந்தார்கள்.மேலும், சுல்தான் ஸலாஹுத்தின் அல்-அய்யூபி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் படையில் இருந்த 50 சதவீதமானோர் காதிரிய்யா வழியமைப்பை சேர்ந்த முரீதீன்களாக காணப்பட்டனர்.
பலஸ்தீனின் புனித பைத்துல் முக்கத்தஸை மீட்பதற்காகப் போராடிய சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் படையின் தளபதிகளில் ஒருவராகவும் இவர்கள் இருந்தார்கள். சிலுவை யுத்தத்தின் போது , அஸ்கலான் கோட்டை முற்றுகையின் போது நடைபெற்ற யுத்தத்தில் அஷ்செய்க் அப்துல் அஸீஸ் அல்-ஜீலானி அவர்கள் கலந்து கொண்டார்கள்.
இவர்களின் அடக்கஸ்தலம் ஈராக்கின் வட பகுதியின் அக்ரா நகரில் அமைந்துள்ளது. இவர்களின் அடக்கஸ்தளத்தை தரிசிப்பதற்காக வருடந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் : ஈராக்கின் அக்ரா நகரில் அமைந்துள்ள அஷ்செய்க் அப்துல் அஸீஸ் அல்-ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மக்பரா
தொகுப்பு: இப்ஹாம் நவாஸ் அல்-காதிரி
Sultan
Salahuddeen Al- Ayyubi who liberated Masjidul Aqsa Palestine was devout
mureed of As-Shaykh Abdhul Azeez Al-jailani. As-Shaykh Abdhul Azeez
Al-jailani (Rahimahullah) is son of As-Shaykh Muhyiddeen Abdhul Qadir
Jailani (Rahimahullah) Over 50 percent of Sultan Salahuddeen Al- Ayyubi
army were mureeds of Qadiriyya Sufi order.
As-Shaykh Abdhul Azeez Al-jailani was one of generals of Sultan Salahuddeen Al- Ayyubi. He participated in the battle of ‘Asqalan.He was burried in Aqra, Northern Iraq. thousand of people around world come to visit his maqbara throughout the year.
Fig - Maqam of As-Shaykh Abdhul Azeez Al-jailani (Rahimahullah) in Aqra Town, Iraq
compiled by: Ifham Nawas Al-Qadiri
As-Shaykh Abdhul Azeez Al-jailani was one of generals of Sultan Salahuddeen Al- Ayyubi. He participated in the battle of ‘Asqalan.He was burried in Aqra, Northern Iraq. thousand of people around world come to visit his maqbara throughout the year.
Fig - Maqam of As-Shaykh Abdhul Azeez Al-jailani (Rahimahullah) in Aqra Town, Iraq
compiled by: Ifham Nawas Al-Qadiri

Leave a Comment