Assayyid Sadath Muhiyidden Waliyullah (Poorvai Ziyaram) - அஸ்ஸைய்யித் ஸாதாத் முஹியித்தீன் வலீயுல்லாஹ் ( போர்வை ஸியாரம்)
Sadath Muhiyidden Waliyullah came srilanka from Iraq. He is descent of As-Sheikh Muhiyiddeen Abdul Qadir Jilani Rahimahullah. It is belived Sadath Muhiyidden Waliyullah came srilanka to visit Dafthar Jailani and Adams Peak. The Ziyaram is situated in Godapitiya, Matara. This ziyaram was discoverd 350 years ago in forest near to Nilvala River. The mosque was built after ziyaram discovered. The People who come for visit this ziyaram bring cloth to cover this ziyaram . This cloth known as 'Poorvai' in Tamil language. Therefore, this village later called in the name of 'Poorvai'.
This ziyaram is one of main symbol for Religious harmony in this region. Not only Muslims but also many Sinhalese and Tamil people visit this ziyaram. Many sinhalese people said their needs fullfilled after they visit this ziyaram. LTTE's last sucide bomblast occured near to this ziyaram in 10th of March 2009.This is only one protected muslim archeolgical site in Matara district. The Gazzate notfication was issued (Gazzate Number-1739) naming ziyaram as archolgical site in december, 2011.
References:
1. Matara District Muslims
2. Jazaysiri Peduru Arachchi (30 September 2017). "Sinhala Tamil Muslim". Dinamina
Article Written by : Ifham Nawas
இவர்கள் ஈராக் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள் ஆவார். இவர்கள் அஷ்செய்க் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வழித்தோண்றலைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
அஷ்செய்க் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தியானத்தில் இருந்த கூரகல தப்தர் ஜெய்லானி மற்றும் பாவதமலையைத் தரிசிக்கும் நோக்கில் இவர்கள் இலங்கைக்கு
வந்திருக்கக்கூடும் என நம்பப்படுகின்றது. மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸையில் அமைந்திருக்கும் கொடப்பிட்டிய என்ற ஊரில் இவர்களின் ஸியாரம் அமைந்துள்ளது. ஏறத்தாள 350வருடங்களுக்கு முன்னர்
நில்வளா கங்கைக்கு அண்மையில் உள்ள காட்டுப்பகுதியில் இவர்களின் ஸியாரம் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களின் ஸியாரம் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னரே அங்கு ஒரு பள்ளிவாசல் அமைக்கப்பட்டது. இப் பெரியாரின் மக்பராவை ஸியாரத் செய்யவரும் மக்கள், அவர்களின் ஸியாரத்தை போர்வையினால்
போர்த்தும் வழக்கம் காணப்பட்டதால், பிற்காலத்தின் இவ்ஊர் போர்வை என்று அழைக்கப்படலாயிற்று.மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக விளங்கும் இந்த ஸியாரத்துக்கு முஸ்லிம்களைப் போலவே,
அதிகமான சிங்கள மக்களும் , தமிழ் மக்களும் வருகை தருகின்றனர். தமது தேவைகள் நிறைவேறவேண்டும் என எண்ணத்தில் இங்கு வருகின்ற சிங்கள மக்களுக்கு, அவர்கள் தேவைகள் நிறைவேறுவதாக தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் அமைந்திருக்கும் விகாரைகளின் பெளத்த பிக்குமார்களும் இந்த ஸியாரத்தை தரிசிக்க வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2009ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் திகதி LTTE பயங்கரவாதிகளின் இறுதி தற்கொலை குண்டுத்தாக்குதல் ஸியாரம் அமைந்துள்ள பள்ளிவாசலின் முன்னால் மேற்கொள்ளப்பட்டது. மாத்தறை மாவட்டத்தில்
பாதுகாக்கப்பட் ஒரேயொரு முஸ்லிம் தொல்பொருள் தளமாக இந்த ஸியாரம் காணப்படுகின்றது. இது குறித்த வர்தமானி அறிவித்தல் 2011ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
ஆக்கம் : இப்ஹாம் நவாஸ் (Ifham Nawas)


Leave a Comment